சாய்பல்லவியா இப்படி நடித்துள்ளார்..? - தீயாய் பரவும் வீடியோ..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!


“பிரேமம்” படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், சாய் பல்லவி கொக்கி போட்டு கொள்ளையடித்தது என்னமோ தமிழ் ரசிகர்களை தான். “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 
 
பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாய் பல்லவியை தமிழில் சினிமாவில் பார்க்க வேண்டுமென கோலிவுட்டே தவம் கிடந்தது. அதற்கு ஏத்த மாதிரியே தமிழில் “கரு“ படம் மூலம் அறிமுகமானார். 
 
அதன் பின்னர் “மாரி 2” படத்தில் தனுஷுடன் சேர்ந்து ரவுடி பேபி பாட்டுக்கு ஆட்டத்தில் மொத்த தமிழ்நாடே கதிகலங்கியது. அதே போல் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள். 
 
மலையாளம், தமிழை விட சாய்பல்லவிக்கு தெலுங்கில் தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் அவர் தெலுங்கில் தற்போது லவ் ஸ்டோரி, விராட பர்வம் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ராணா கதாநாயகனாக நடிக்கும் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் சாய்பல்லவியின் கதாபாத்திர பெயருடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. படம் வரும் ஏப்-30ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தப்படத்தில் வெண்ணிலா என்கிற நக்ஸலைட்டாக நடித்துள்ளார். 
 
பாடுவதில் தீராத ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து பெண் எதிர்பாராத சூழலால் எப்படி நக்ஸலைட் இயக்கத்தில் சேருகிறாள் என்பதுதான் படத்தின் கதை. வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார். 
 
 
இந்த படத்தில் சாய்பல்லவி நடித்துள்ள சில காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி நடித்துள்ளார்..? என வாயை பிளந்து வருகிறார்கள்.

சாய்பல்லவியா இப்படி நடித்துள்ளார்..? - தீயாய் பரவும் வீடியோ..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! சாய்பல்லவியா இப்படி நடித்துள்ளார்..? - தீயாய் பரவும் வீடியோ..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 17, 2021 Rating: 5
Powered by Blogger.