"அழகான கன்னுக்குட்டி.. செம்ம க்யூட்.." - ரச்சிதா மகாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..! - உருகும் ரசிகர்கள்..!


தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இவர்கள். 
 
அந்த வகையில் விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வந்தது. 
 
அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது அழகினாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 
 
அதன் பிறகு ஜூனியர் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலில்ன் தன் கணவருடன் இணைந்து நடித்து வந்தார். 
 
இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் கோரோனா பிரச்சனையினால் இந்த சீரியல் தற்பொழுது ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் தற்பொழுது ரட்சிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
இவ்வாறு ஜீ தமிழ், விஜய் டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் கலக்கி வந்த இவர் தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு கன்னுக்குட்டியை கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

அதனுடன், அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் அன்பு மட்டும் தான். எனக்கான முதல் வாழ்த்து இந்த அழகியிடம் இருந்து என்று குறிபிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அழகான கன்னுக்குட்டி.. செம்ம க்யூட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"அழகான கன்னுக்குட்டி.. செம்ம க்யூட்.." - ரச்சிதா மகாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..! - உருகும் ரசிகர்கள்..! "அழகான கன்னுக்குட்டி.. செம்ம க்யூட்.." - ரச்சிதா மகாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 25, 2021 Rating: 5
Powered by Blogger.