சிறுமியை மிரட்டி சீரழித்த டிக்டாக் பிரபலம் - போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..!


ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன் சிப்பாடா பார்கவ். டிக்டாக் பிரபலமான பார்கவ், தனது நகைச்சுவையான வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் ’ஃபன்பக்கெட் பார்கவ்’ என்று பலராலும் அறியப்பட்டு வந்தான். 
 
”ஓ மை காட்... ஓ மை காட்..“ என்று இவன் பேசும் வீடியோக்களால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பார்கவ், தற்போது உண்மையிலேயே ’ஓ மை காட்’ என்று கூறியபடி தான் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 
 
கடந்தாண்டு டிக்டாக் தடைசெய்யப்பட்டாலும், அதன்மூலம் கிடைத்த புகழினால் பார்கவ், யூடிபிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தான். இந்தநிலையில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். ஒருகட்டத்தில் பார்கவ் அந்த சிறுமியிடம் தனது காதலை கூறியுள்ளான். 
 
அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார். இதனையடுத்து, சிறுமியிடம், ”உனது அந்த""ங்கமான புகைப்படங்களும், வீடியோக்களும் என்னிடம் இருக்கிறது. நான் சொல்வதை ஏற்க மறுத்தால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டி உள்ளான். 
 
இதனைத்தொடர்ந்து பயந்து போன அந்த சிறுமியை, தனியாக அழைத்து வந்து கொடுமை செய்துள்ளான். மேலும், விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியுடன் தனிமையில் உல்"சமாக இருந்துள்ளான். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். டிக்டாக் வீடியோக்களால் பிரபலமான சிப்பாடா பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். 
 
Fun Bucket பார்கவ் என அழைக்கப்படும் சிப்பாடா பார்கவ் ” Oh My God, Oh My God ! ” எனும் காமெடி டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவர். நகைச்சுவை வீடியோக்கள் என்பதால் மொழி வேறுபாடு இன்றி இவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் செய்தது. 
 
ஏப்ரல் 1-ம் தேதி விசாகப்பட்டினத்தின் பெண்டூர்த்தி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்த போதே இந்த பாலியல் பலாத்கார சம்பவம் வெளியே வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 
 
பார்கவ் மீது போக்சோ சட்டத்தைத் தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 354 ( பெண்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது கிரிமினல் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சிறுமியை மிரட்டி சீரழித்த டிக்டாக் பிரபலம் - போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..! சிறுமியை மிரட்டி சீரழித்த டிக்டாக் பிரபலம் - போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..! Reviewed by Tamizhakam on April 20, 2021 Rating: 5
Powered by Blogger.