"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு.." - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..! - உருகும் ரசிகர்கள்..!

 
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 
 
‘மகாநடி’ திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். 
 
கொழு, கொழு லுக்கில் இருந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் இப்போது எந்த உடையாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.மார்டன் உடையில் விதவிதமாக போட்டோ ஷுட்களை நடத்தி வரும் கீர்த்தி சுரேஷ். புடவை, தாவணி பாவாடையில் வெளியிடும் போட்டோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். 
 
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 
கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.
 
 
அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நிதின் என்பவர் நடித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக உடல் எடை சற்று கூடி பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார். 


இந்நிலையில், மொட்டை மாடியில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மின்னும் கீர்த்தி சுரேஷின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு.." - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..! - உருகும் ரசிகர்கள்..! "ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு.." - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.