"ஒரு பாடல் ஷூட் பண்ணனும்ன்னு ஊட்டிக்கு கூட்டிட்டு போய் வெறும் ப்ரா-வை கொடுத்தாங்க..." - ஷாக் ஆன பிரபல நடிகை..!


பிரபல நடிகை காயத்ரி ஜெயராம் அவர் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான சினிமா பாடல் ஒன்றின் சூட்டிங் ஸ்பாட் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த மனதை திருடிவிட்டாய் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராம் ஆவார். 
 
பிறகு ஏப்ரல் மாதத்தில், வசீகரா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். 
 
படவாய்ப்புகள் குறைந்ததால் தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார். நடிகை காயத்ரி ஜெயராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில் உள்ள மஞ்சக்காட்டு மைனா பாடல் உருவான விதத்தைப் பற்றி மனம் திறந்தார். 
 
ஒரு பாடல் காட்சி படமாக்கவேண்டும் என கூறி ஊட்டிக்கு அழைத்து சென்றனர். அந்த பாடல் படமாக்கப்படும் போது ஊட்டியில் குளிர் மிகவும் அதிகமாக இருந்ததது. அந்தப் பாடலில் நான் நான் உடுத்த இருந்த உடையை ட்ரையல் பார்க்க முந்தைய நாளே கொடுத்து இருந்தனர். 
 
 
நானும் வாங்கி கொண்டு சென்றேன். அந்த உடையை எடுத்து பார்த்தபோது ஒரு பிராவை மட்டும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். எனக்கு ஷாக் ஆகி விட்டது. அப்போது, அந்த பிராவின் கீழ் பகுதியில் உடலை மறைப்பதற்கு வலை போன்ற துணி ஒன்று இருந்தது. 
 
ஆனால், அடுத்த நாள் சூட்டிங் ஸ்பாட் சென்ற போது அந்த ப்ராவின் கீழ் பகுதியில் இருந்த வலை போன்ற துணியை கட் செய்து விட்டார்கள். அப்போது அந்த உடையில் இருந்த வலைகளை காணோமே என்ன செய்வது என்று தெரியாமல் மறைப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று காஸ்ட்யூம் டிசைனரிடம் சென்று கேட்டேன். 


 
பின்னர் அவரது பையில் இருந்த இரண்டு சூரியகாந்திப் பூவை எடுத்து ஒன்றை தலையிலும் மற்றொன்றை உடையிலும் வைத்துக் கொண்டு அந்த பாடலில் நடனம் ஆடினேன் எனவும் நடிகை காயத்ரி ஜெயராம் கூறியுள்ளார்.

"ஒரு பாடல் ஷூட் பண்ணனும்ன்னு ஊட்டிக்கு கூட்டிட்டு போய் வெறும் ப்ரா-வை கொடுத்தாங்க..." - ஷாக் ஆன பிரபல நடிகை..! "ஒரு பாடல் ஷூட் பண்ணனும்ன்னு ஊட்டிக்கு கூட்டிட்டு போய் வெறும் ப்ரா-வை கொடுத்தாங்க..." - ஷாக் ஆன பிரபல நடிகை..! Reviewed by Tamizhakam on April 21, 2021 Rating: 5
Powered by Blogger.