சேலையை தூக்கி கட்டிக்கொண்டு லபோ திபோ என தெறித்து ஓடும் கீர்த்தி சுரேஷ் - என்ன மேட்டருன்னு பாருங்க..!


தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் சிவப்பு சேலையில் அழகு சிலை போல் நின்று வெளியிட்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
 
மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். 
 
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.கொழு, கொழு லுக்கில் இருந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் இப்போது எந்த உடையாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
 
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அதில் போட்டில் பயணம் செய்வதற்காக நிற்குமாறு கையை காட்டிவிட்டு ஓடுகிறார் கீர்த்தி சுரேஷ். சேலைக் கட்டிக்கொண்டு லபோதிபோ என கத்தியப்படியே ஓடுகிறார். அவரை பின்தொடர்ந்தப் படியே கேமராவும் செல்ல இறுதியில் போட்டை நெருங்கியதும் யாரையோ தேடுகிறார்.
 

 
அதன் பிறகு, கடைசியாக எங்கே என்னுடைய போன் என கேமராவையும் STOP செய்ய சொல்கிறார். இந்த வீடியோவுக்கு வீக்கென்டை நோக்கி ஓடுவது போல என கேப்ஷன் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த நெட்டிசன்கள், ப்பா என்னா ஓட்டம் என பிரமித்து போயுள்ளனர்.

சேலையை தூக்கி கட்டிக்கொண்டு லபோ திபோ என தெறித்து ஓடும் கீர்த்தி சுரேஷ் - என்ன மேட்டருன்னு பாருங்க..! சேலையை தூக்கி கட்டிக்கொண்டு லபோ திபோ என தெறித்து ஓடும் கீர்த்தி சுரேஷ் - என்ன மேட்டருன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on April 24, 2021 Rating: 5
Powered by Blogger.