படுக்கையில் அழகிய ஃபோட்டோ.. ! - வெறுப்பவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த புன்னகையரசி சினேகா..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவர் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
 
மேலும் ஆனந்தம், புன்னகை தேசம், ஆட்டோகிராஃப், பார்த்திபன் கனவு போன்ற திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார். இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு ஸ்னேகா திரைப்படங்களில் பெரியதாக நடிக்கவில்லை. 
 
தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அப்படி அதிகாலையில், தனது மகன் மற்றும் மகளுடன் படுத்திருக்கும் ஃபோட்டோ ஒன்றை நேற்று பகிர்ந்திருந்தார். 
 
பைஜாமா அணிந்த படி குழந்தைகளுடன் பாசமாக படுத்திருக்கும் அந்த அழகிய ஃபோட்டோவுடன் தன்னை வெறுப்பவர்களுக்கு ஒரு கடுமையான மெசேஜையும் அவர் பதிவிட்டிருந்தார். அதில், என்னை வெறுப்பதற்கு நான் யாருக்கும் காரணம் தருவதில்லை. 
 
 
பொறாமையின் காரணமாக அவர்களே ஏதாவது ஒரு கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஹேப்பி சன்டே என குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் சினேகாவின் இந்த பதிவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து, கமெண்ட் செய்துள்ளனர்.

படுக்கையில் அழகிய ஃபோட்டோ.. ! - வெறுப்பவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த புன்னகையரசி சினேகா..! படுக்கையில் அழகிய ஃபோட்டோ.. ! - வெறுப்பவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த புன்னகையரசி சினேகா..! Reviewed by Tamizhakam on May 10, 2021 Rating: 5
Powered by Blogger.