"கிளாமர் வில்லி.." - யாரும் எதிர்ப்பார்த்திடாத கவர்ச்சி கெட்டப்பில் நடிகை சமந்தா..!


தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் சமந்தா. வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவோம். 
 
எனக்குத் தெலுங்கே தெரியாது. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கைக் கற்றுக்கொள்கிறேன் என்கிறார் சமந்தா. சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார். 
 
ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த பிறகு, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
 
குடும்பப்பாங்கினியாக, காதல் பொங்கி வழிய ஹீரோயின் காதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதை உருக வைத்த சமந்தா தற்போது யாரும் எதிர்பார்க்காத கிளாமர் கெட்டப்பில், வில்லியாக மிரட்ட தயாராகியுள்ளார். இதுகுறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. 
 
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் 'தி ஃபேமிலிமேன் 2 ' தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்புகள் சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 
 
திருமணத்திற்கு பின், தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தாலும்... அவ்வப்போது வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். அந்த வகையில், ஏற்கனவே தமிழில் விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள' படத்தில், இரட்டை வேடங்களில் ஒரு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். 
 
மேலும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து பத்திரிகையாளர்களின் பாராட்டை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து முழு நீல வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே இந்த வெப் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

"கிளாமர் வில்லி.." - யாரும் எதிர்ப்பார்த்திடாத கவர்ச்சி கெட்டப்பில் நடிகை சமந்தா..! "கிளாமர் வில்லி.." - யாரும் எதிர்ப்பார்த்திடாத கவர்ச்சி கெட்டப்பில் நடிகை சமந்தா..! Reviewed by Tamizhakam on May 13, 2021 Rating: 5
Powered by Blogger.