கீர்த்தி சுரேஷா இது..? - படுக்கையறை காட்சியில் படு சூடான ரொமான்ஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


கீர்த்தி சுரேஷ் தற்போது மகேஷ்பாபுடன் சர்காரு வாரி பாட்டா தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதை மற்றும் கீர்த்தி சுரேஷ், மகேஷ்பாபு ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. ஆந்திராவின் பிரின்ஸ் என்றழைக்கப்படும் மகேஷ்பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடிக்கிறார். 
 
பரசுராம் இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி. கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பால் எல்லா படங்களையும் போல இதன் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மகேஷ்பாபு த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதற்கு முன் இவர்கள் இணைந்து இரு படங்களில் வேலை செய்திருக்கிறார்கள். 
 
சர்காரு வாரி பாட்டா படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. தமிழில் இரும்புத்திரை வந்ததே, அதேபோல. ஆனால், அந்தப் படம் இல்லை. எந்தப் படத்தின் ரீமேக்கிலும் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர் மகேஷ்பாபு. 
 
சர்கார் வாரி பாட்டா கதை வங்கி மோசடி என்றாலும் இது வேறு. இந்தப் படத்தில் மகேஷ்பாபு வங்கி மேலாளராகவும், கீர்த்தி சுரேஷ் அவரது உதவியாளராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. முதல்வராக நடித்தவர் வங்கி மேலாளராக டீ புரமோட் ஆகியிருப்பதும் சுவாரஸியமாகத்தான் உள்ளது. 
 
மைதிரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. தமன் படத்துக்கு இசையமைக்கிறார். 
 
இந்நிலையில், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான ரங்கு தே படத்தில் படு சூடான படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கீர்த்தி சுரேஷா இப்படி நடிச்சுருக்காங்க என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷா இது..? - படுக்கையறை காட்சியில் படு சூடான ரொமான்ஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! கீர்த்தி சுரேஷா இது..? - படுக்கையறை காட்சியில் படு சூடான ரொமான்ஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 14, 2021 Rating: 5
Powered by Blogger.