ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிவேதா பெத்துராஜ்..!

 
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ்.
 
சில தெலுங்கு படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜுக்கு, அங்கே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.எனவே தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.
 
எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 
 
தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
 
கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக, கொரோனா பிரச்சனையின் காரணமாக எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் நிவேதா பெத்துராஜ்.நீண்ட இடைவெளிக்கு பின், தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
 
இதனை பார்த்த ரசிகர்கள், நிவேதா பெத்துராஜா இப்படி பொசு பொசுன்னு இருக்கிறார்..? என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிவேதா பெத்துராஜ்..! ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிவேதா பெத்துராஜ்..! Reviewed by Tamizhakam on May 02, 2021 Rating: 5
Powered by Blogger.