"பார்ட்டிக்கு போன இடத்தில் என்னை..." - பகீர் தகவலை வெளிப்படையாக கூறிய நிவேதா பெத்துராஜ்..!


‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து இவர் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்திருந்தார். 
 
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ் கூறிய விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அவர் பேசியதாவது, திமிரு பிடிச்சவன் கதையைச் சொல்லும்போதே இயக்குநர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். 
 
புல்லட் ஓட்ட வேண்டும் என்று சொன்னார். அதை கற்றுக்கொண்டு ஓட்டினேன். படப்பிடிப்பில் இயக்குநரை உட்காரவைத்து ஓட்டிக் காட்டினேன். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்து ஓட்டினேன். திடீரென ஒருநாள் மீன் பாடி வண்டி ஓட்டச் சொன்னார். 
 
 
டப்பிங்கில் படத்தைப் பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க புதுசு புதுசாக நிறைய செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இது இருக்கும்” என்றார். 
 
மேலும் படத்தைப் பார்த்துவிட்டு தணிக்கைக் குழு தன்னைப் பாராட்டியதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து, நடிகைகள் மீதான அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 
 
அதற்கு பதிலளித்த நிவேதா பெத்துராஜ், பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த இடத்திலேயே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். MeToo பிரச்னையில் நானும் சிக்கி இருக்கிறேன். 
 
 
ஒரு பார்ட்டிக்கு போன இடத்தில் எனக்கும் அதுபோன்ற சம்பவம் நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண். எனக்குள்ள பயம் வெட்கம், காரணமாக நான் அதை அப்போது வெளியில் சொல்லவில்லை. 

தவறு என் மீது தான். நான் அந்தப் பார்ட்டிக்கு சென்றிருக்கக் கூடாது. அங்கு போகாமல் இருந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் இப்போது நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்” என்று நிவேதா பெத்துராஜ் கூறினார்.

"பார்ட்டிக்கு போன இடத்தில் என்னை..." - பகீர் தகவலை வெளிப்படையாக கூறிய நிவேதா பெத்துராஜ்..! "பார்ட்டிக்கு போன இடத்தில் என்னை..." - பகீர் தகவலை வெளிப்படையாக கூறிய நிவேதா பெத்துராஜ்..! Reviewed by Tamizhakam on May 11, 2021 Rating: 5
Powered by Blogger.