"வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் மந்திர வீடியோ..!

 
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி தீயாக பரவுவது வழக்கமாகிவிட்டது. லேட்டஸ்டாக அவர் பெயர் ஒரு தொழில் அதிபருடன் சேர்ந்து அடிபட்டது. அதாவது சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது, விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியானது.
 
இந்நிலையில் இது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்திருக்கிறார். கீர்த்தி கூறியிருப்பதாவது, என் திருமணம் குறித்த வதந்திகளால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. இந்த வதந்திகள் எல்லாம் எங்கிருந்து தான் கிளம்புகிறது என்று வியக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால் இந்த உலகிற்கு முதலில் அறிவிப்பது நானாகத் தான் இருக்கும். 
 
என் திருமணம் குறித்து ஏதாவது யூகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது நான் என் கெரியரில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்துக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. 
 
 
இது குறித்து அறிந்த கீர்த்தியோ, அனிருத் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே, அவருடன் திருமணம் இல்லை என்றார். அதற்கும் முன்பு அரசியல் பிரபலம் ஒருவரின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பேச்சு கிளம்பியது. 
 
கீர்த்திக்கு அடிக்கடி திருமணம் செய்து வைக்கிறார்கள், அவர் கெரியரில் தான் கவனம் செலுத்துகிறார் என்று பெற்றோர் விளக்கம் அளித்தும் கூட அந்த பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடில்லை. 
 
 
கீர்த்தி தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள அந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 


இந்நிலையில், வெறும் முண்டா பனியன், லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக யோகா செய்வது மட்டுமில்லாமல் மந்திரம் சொல்வதுமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி.

"வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் மந்திர வீடியோ..! "வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் மந்திர வீடியோ..! Reviewed by Tamizhakam on May 21, 2021 Rating: 5
Powered by Blogger.