புரட்டி போட்ட புயல்... பாதிப்புக்கு நடுவே குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை - வலுக்கும் கண்டனங்கள்..!


கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடந்தது. 
 
இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மேலும் டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இந்த புயல் காரணமாக சுமார் 6000 கிராமத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். 
 
இந்த நிலையில், டவ்-தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே பிரபல நடிகையான தீபிகா சிங் நடனமாடி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுள்ளார். 
 
 
அதில் “புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும்” என்று பதிவிட்டுள்ளார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது. 
 
இந்த புயல் காரணமாக மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. அந்த மாவட்டங்களில் 12 பேரின் உயிரை இந்த புயல் பறித்தது. 
 
 
மேலும் இந்த புயல் குஜராத், கர்நாடகத்திலும் பெரும்சேதத்தை ஏற்படுத்தி பலரின் உயிரையும் பறித்தது. புயல் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பையில் சூறைக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. அப்போது காற்றின் வேகம் 114 கி.மீ. ஆக இருந்தது. 
 
 
மேலும் 23 செ.மீ. மழை பெய்தது. குறிப்பாக மும்பை கடலின் சீற்றம் கடுமையாக இருந்தது. கடல் கொந்தளித்ததால், ராட்சத அலைகள் பல அடி உயரம் எழுந்தன. 
 
 
பனை உயரம் எழுந்து தாக்கிய அலையால் மும்பையின் சுற்றுலா தலமான கேட் வே ஆப் இந்தியா சேதம் அடைந்தது. ‘டவ்தே’ புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய நடிகை தீபிகா சிங்கிற்கு சமூகதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


 
புயலை நாம் தடுத்த நிறுத்த முடியாது. அதுவாகவே கடந்து போகும் என்றும் நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புரட்டி போட்ட புயல்... பாதிப்புக்கு நடுவே குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை - வலுக்கும் கண்டனங்கள்..! புரட்டி போட்ட புயல்... பாதிப்புக்கு நடுவே குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை - வலுக்கும் கண்டனங்கள்..! Reviewed by Tamizhakam on May 20, 2021 Rating: 5
Powered by Blogger.