ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா..? - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஆடுகளம். தனுஷின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாகவும் இது கருதப்பட்டது. 
 
ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சேவல் சண்டையை மையப்படுத்தி கமர்சியல் அம்சமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 
 
ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியிருந்த ஆடுகளம் படத்தின் பாடல்கள் இன்றும் பலரது பிளே லிஸ்டில் உள்ளது. 
 
 
அதிலும் வெள்ளாவி வெச்சு வெளுத்தாங்களா எனும் பாடல் வரிக்கு ஏற்ப பக்காவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் டாப்ஸி. 
 
 
ஆனால் முதல் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் திரிஷா தான். பாதி வரை நடித்த திரிஷா அதன் பிறகு படத்திற்கு செட் ஆகவில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு டாப்ஸியை இறக்கினார் வெற்றிமாறன்.


இந்த நிலையில், தனுஷூடன் ஐரீனாக த்ரிஷா நடித்த காட்சிகளின் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா..? - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா..? - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.