"புதுப்பேட்டை" படத்தில் சினேகாவுக்கு பதிலாக யார் நடிக்கவிருந்தார் என தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புதுப்பேட்டை'. 2006-ம் ஆண்டு மே 26-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. 
 
ஆனால், இப்போது வரை இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்த இந்தப் படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 
 
இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். 'புதுப்பேட்டை 2' குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. 
 
கண்டிப்பாக உருவாகும் என்று பதிலளித்து வந்தார் இயக்குநர் செல்வராகவன். தனது அடுத்த படங்களாக 'நானே வருவேன்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகியவற்றை அறிவித்துள்ளார். இதனால் 'புதுப்பேட்டை 2' எப்போது என்ற கேள்வி எழுந்தது. 
 
இந்நிலையில், 'புதுப்பேட்டை' வெளியான நாளை முன்னிட்டு புதிதாக போஸ்டர் ஒன்றைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். அத்துடன், "பயணம் மேலும் தொடரும்" என்று பதிவிட்டு தனுஷ், யுவன் மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டுள்ளார்.
 
 
இதை தொடர்ந்து, தற்போது... புதுப்பேட்டை 2 படத்தில் காயத்ரி ரகுராம் தான், முதலில் சிநேகாவிற்கு பதில் நடிக்க இருந்ததாக... சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
 
இயக்குனர் செல்வராகவன் தன்னை அந்த கதாபாத்திரத்திற்காக அணுகும் போது, ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்பதை தெரிவித்துள்ளார். ஒருவேளை சினேகா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும் கச்சிதமாகத்தான் இருக்கும் என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

"புதுப்பேட்டை" படத்தில் சினேகாவுக்கு பதிலாக யார் நடிக்கவிருந்தார் என தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! "புதுப்பேட்டை" படத்தில் சினேகாவுக்கு பதிலாக யார் நடிக்கவிருந்தார் என தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on May 26, 2021 Rating: 5
Powered by Blogger.