"எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு.." - ஜிம் ட்ரெயினர் அருகில் நாக்கை நீட்டியபடி நடிகை சமந்தா போஸ்..! - வைரலாகும் புகைப்படம்..!


ஏ மாய சேசாவே படம் மூலம் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆனார். ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால் அவரின் கெரியர் முடிந்துவிடும் என்பார்கள். 
 
ஆனால் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
 
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் சமந்தா. வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவோம். எனக்குத் தெலுங்கே தெரியாது. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கைக் கற்றுக்கொள்கிறேன் என்கிறார் சமந்தா. 
 
சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார். ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த பிறகு, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
 
அழகான தோற்றம் கொண்ட சமந்தாவுக்கு கல்லூரிக் காலத்தில் மாடலிங் வாய்ப்புகள் வந்துள்ளன. நாயுடு ஹால் உள்ளிட்ட பல நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். விளம்பரப் படங்களில் சமந்தாவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் உடனடியாகத் தான் இயக்கும் மாஸ்கோவின் காவேரி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். 
 
அதுதான் சமந்தா ஒப்புக்கொண்ட முதல் படம். ஆனால் முதலில் வெளியான படம் - விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்குப் பதிப்பான Ye Maaya Chesave. தமிழில் த்ரிஷாவும் தெலுங்கில் சமந்தாவும் கதாநாயகிகளாக நடித்து வெற்றி பெற்ற படம். இருவருமே மற்ற மொழிப் பதிப்பில் சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்கள். 
 
இந்தப் படத்தில் நடித்ததால், உலகத் தமிழ் மாநாட்டுக்காக கெளதம் மேனன் இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலின் விடியோவில் சில நொடிகள் இடம்பெறவும் சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி கடினமாக போராடி சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய சமந்தா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். 
 

 
தற்போது, ஜிம் ட்ரெயினருடன் நெருக்கமாக நின்று கொண்டு நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய்ய நாக்கு என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு.." - ஜிம் ட்ரெயினர் அருகில் நாக்கை நீட்டியபடி நடிகை சமந்தா போஸ்..! - வைரலாகும் புகைப்படம்..! "எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு.." - ஜிம் ட்ரெயினர் அருகில் நாக்கை நீட்டியபடி நடிகை சமந்தா போஸ்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 05, 2021 Rating: 5
Powered by Blogger.