பாலிவுட் நடிகை அலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்குள் நீந்தியபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சதக் 2 திரைப்படத்தின் ட்ரைலர் உலக அளவில் அதிக டிஸ் லைக்குகளை பெற்ற ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலை மரணம் விவகாரத்தில் அவரது ரசிகர்கள் பலரும் அலியா பட் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களின் மீது கடும் கோபத்தில் இருக்கின்ற நிலையில் அலியா பட் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் பங்கமாக கலைத்து வருவதோடு இன்ஸ்டாகிராமில் டிஸ் லைக் பட்டன் இருந்தா நல்லா இருக்குமே என கூறிவருகின்றனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அலியா பட் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிரபல திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்திருக்கும் அலியா பட் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதற்காக பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் வென்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நடிகை ஆலியாபட் மிக சிறிய வயதிலேயே சினிமாவுக்கு அறிமுகமாகி தனது நடிப்புத் திறனால் முன்னணி இடம் பிடித்தவர். அனைத்து முன்னணி கதாநாயகர்களோடும் ஜோடி சேர்ந்துவிட்ட அவர் திரைப்படங்களுக்கு இணையாக விளம்பரங்கள் மற்றும் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.




