"சால்ட் அண்ட் பெப்பர் லுக்.." - உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் டிங்கு..!


குழந்தை நட்சத்திரமாக ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் நடிகர் டிங்கு. இவருக்கு வெள்ளித்திரையில் தொடர்ந்து தமிழில் சின்னத்திரையில் 90களில் கலக்கிய பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர். 
 
அதில் சிலர் இப்போதும் சீரியல்கள், படங்கள் என நடித்து வருகிறார்கள். ஆனால் நாம் பார்த்து பழகிய நிறைய பிரபலங்கள் கேமரா பக்கம் வராமல் செட்டில் ஆகிவிட்டனர். 
 
அப்படி நமக்கு எல்லாம் நன்கு பரீட்சயப்பட்ட ஒரு நடிகர் என்றால் அது டிங்கு தான். இவரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை, சீரியலை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றிருக்கிறார். 
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இவர் சீரியல் நடிகை ப்ரீத்தியுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார். அதன்பிறகு இரண்டாவது திருமணம் செய்த டிங்கு சினிமா பக்கமே காணவில்லை. 
 
 
இந்த நிலையில் சீரியல் நடிகை சோனியா, டிங்குவிற்கு திருமண வாழ்த்து கூறி அவரது தற்போதைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.


உடல் எடை கூடி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ள நடிகர் டிங்கு-வை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே டிங்குவா இது..? என்று ஐயம் எழுப்பி வருகிறார்கள்.

"சால்ட் அண்ட் பெப்பர் லுக்.." - உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் டிங்கு..! "சால்ட் அண்ட் பெப்பர் லுக்.." - உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் டிங்கு..! Reviewed by Tamizhakam on May 21, 2021 Rating: 5
Powered by Blogger.