தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்யும் நடிகை அனுஷ்கா..! - மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!


ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன. 
 
பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. 
 
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார்.
 
சிரிப்பின் அழகில் மயக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தனது கதாபாத்திரத்திற்கு தரமான கதை இருக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
 

அதில் ஜெயித்தும் காட்டினார், அவரை பார்த்து சில நடிகைகள் தங்களது ரூட்டை மாற்றினார்கள் என்றே கூறலாம். அனுஷ்காவை பற்றி பட செய்திகள் வருகிறதோ இல்லையோ, அவரது திருமணம் குறித்து தகவல் வந்துவிடும்.அப்படி இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது. 
 
அதாவது நடிகை அனுஷ்கா துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அவருக்கு வயது அனுஷ்காவை விட குறைவு என்கின்றனர். திருமணம் குறித்து இதுவரை எந்த தகவலும் அனுஷ்கா தரப்பில் இருந்து வரவில்லை.

தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்யும் நடிகை அனுஷ்கா..! - மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்யும் நடிகை அனுஷ்கா..! - மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on May 02, 2021 Rating: 5
Powered by Blogger.