"ஸ்ருதிமா.. இதெல்லாம் ரொம்ப தப்புமா.." - 16M பாலோவர்களை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்..!


 
பாடகி, இசையமைப்பாளர், நடிகை, மாடல் என பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமலின் மூத்த மகளான ஸ்ருதி, 1992 ல் வெளியான கமல் நடித்த 'தேவன்மகன்' படத்தில், 'போற்றிப் பாடடி பெண்ணே' பாடலை பாடி தனது திரையுலக பயணத்தை துவக்கினார். 
 
தொடர்ந்து இந்தி, தமிழில் பல படங்களில் பின்னணி மட்டும் பாடி வந்த ஸ்ருதி, 2000 ல் 'ஹே ராம்' படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிப்பு பயணத்தையும் துவக்கினார். இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்த ஸ்ருதி, தமிழில் 'ஏழாம் அறிவு', '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காத ஸ்ருதிஹாசன், தற்போது மீண்டும் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 'லாபம்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
 
டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென மரணமடைந்ததால், இந்த படத்தை தானே வெளியிடுவதாக விஜய் சேதுபதி தெரிவித்தார். ஆனால் தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது.
 
சமீபத்தில் தனது காதலரும், டூடுல் கலைஞருமான சாந்தனுவை அ்ழைத்து வந்து கமலுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தொடர்ந்து கமலும், சாந்தனு வடிவமைத்து தனது வித்தியாசமாக ஃபோட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
 
சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் ஸ்ருதியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை எட்டியது. இந்நிலையில், சட்டையை ஒரு பக்கம் கழட்டி விட்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
இதனை பார்த்த ரசிகர்கள்,  ஸ்ருதிமா.. இதெல்லாம் ரொம்ப தப்புமா என்று கலாய்த்து வருகிறார்கள்.

"ஸ்ருதிமா.. இதெல்லாம் ரொம்ப தப்புமா.." - 16M பாலோவர்களை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்..! "ஸ்ருதிமா.. இதெல்லாம் ரொம்ப தப்புமா.." - 16M பாலோவர்களை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.