"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - அதுவரைக்கும் முண்டா பனியன்.. - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் போட்டோஸ்..!

 
கோலிவுட்டில் ஒரு தமிழ்ப் பெண் முன்னணி நடிகையாக இருப்பது உண்மையிலேயே அரிதான விஷயம். மும்பை, ஆந்திரம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இயக்குநர்களும் தமிழ்ப் பெண்களை விடவும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். 
 
அது என்னவோ அப்படியொரு விநோத நடைமுறை தமிழ்த் திரையுலகில் பல ஆண்டு காலமாக நிலவி வருகிறது. தமிழ் ரசிகர்களும் எந்தப் பேதமும் பார்க்கமால் இதர மொழிக் கதாநாயகிகளைக் கொண்டாடி வருகிறார்கள். இந்தச் சூழலை மாற்றிக் காட்டியவர், த்ரிஷா. 
 
இன்று அவருடைய பிறந்த நாள். ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் த்ரிஷாவுக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள். இவருக்கு, முதன் முதலில் பிரவீன்காந்தி இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் த்ரிஷா. 
 
அதன் பிறகு அவர் அமீர் இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்தார். பின்னர் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து மனசெல்லாம் படத்தில் நடித்தார். அந்த இரண்டு படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை. நமக்கு சினிமா சரிபட்டு வருமா என்று த்ரிஷா யோசிக்க ஆரம்பித்த நேரத்தில் தான் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக சாமி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 
அறிமுகமான ஆண்டில் இருந்து சராசரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்துவந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான தூங்காவனம் 50-வது படமாக வெளிவந்தது. ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான விஷயம். 
 
 
ஆனால் 50-வது படம் நடிக்கும்போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமான ஒன்றாகும். த்ரிஷாவின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இன்று வரை கொண்டாடப்படும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 
 
 
வசன உச்சரிப்பில் தொடங்கி, ஹேர் ஸ்டைல், புடவை என விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி செய்தது அனைத்தும் அன்றைய தேதியில் டிரெண்டாக மாறியது. அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு 2018-ம் ஆண்டு வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்தார் த்ரிஷா. 
ஆரம்ப காலத்தில் கவர்ச்சி கடலாக காட்சி தந்த திரிஷா தமிழை விடதெலுங்கில் கொஞ்சம் கிளாமர் தூக்கலாக காட்டியுள்ளார். அந்த வகையில், பலரும் பார்த்திடாத திரிஷாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன..

"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - அதுவரைக்கும் முண்டா பனியன்.. - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் போட்டோஸ்..! "நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - அதுவரைக்கும் முண்டா பனியன்.. - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.