"இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..?.." - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..!

 
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. 
 
“8 தோட்டாக்கள்”படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 25 வயதாகும். இவர் சில மலையாள படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார்.
 
அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்துள்ளார். பின் தமிழில் “சர்வம் தாளமயம்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
அண்மையில் வெளிவந்த”சூரரைப் போற்று” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி. அமேசான் தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களால் பாராட்டப்பட்டு வருகிறது. 
 
 
இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துவிட்டது. படத்தின் ஹீரோயின் அபர்ணா பாலமுரளி கொஞ்சம் பருமனாக கிராமத்து பெண் தோற்றத்தில் சூர்யாவுடன் முரட்டு ரொமான்ஸில் ஈடுபட்டு அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
 
 
தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல இடம் உண்டு என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் ஓவர் கிளாமர் , ஓவர் ஸ்டைல் , ஓவர் மேக்கப் இப்படி எதுவுமே இல்லாமல் சிம்பிள் லுக்கில் வசீய வைக்கும் பார்வையால் ரசிகர்ளை கட்டி இழுத்துள்ளார்.


இந்தநிலையில் அபர்ணாவின் அடுத்த படம் குறித்து இன்னும் எதுவும் வெளியாகாத நிலையில், இவரது புகைப்படங்களை பார்த்து மனசை தேற்றி வருகிறார்கள்.

"இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..?.." - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..! "இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..?.." - வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.