"பேபி டால்... - எங்களோட ஆக்ஸிஜனே நீங்க தான்.." - ஸ்லீவ்லெஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் “கீதாஞ்சலி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். 
 
அதன்பிறகு தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ரஜினிமுருகன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி பன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது. 
 
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார்.அந்த வகையில் தனுஷ், விஜய், விக்ரம், சூர்யா போன்ற அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார். 
 
 
இது ஒரு பக்கமிருக்க தற்சமயம் தெலுங்கில் சர்க்கார் வாரி பட்டா என்ற வங்கி மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகியாம். 
 
 
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இவர் தெலுங்கில் நடித்த ரங்கு தே திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பல்வேறு கிசு கிசு காட்சிகள் வெளியாகியுள்ளன. 
 
 
இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் படுக்கையறை காட்சியிலும் நடித்துள்ளாராம். இந்த காட்சிகள் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தியது.
 
 
இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


ஸ்லீவ்லெஸ் உடையில் தேவதையாய் மின்னும் கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்கள். சூப்பர்... பேபி டால்... எங்களோட ஆக்ஸிஜனே நீங்க தான் என்று உருகிவ் வருகிறார்கள்.
"பேபி டால்... - எங்களோட ஆக்ஸிஜனே நீங்க தான்.." - ஸ்லீவ்லெஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..! "பேபி டால்... - எங்களோட ஆக்ஸிஜனே நீங்க தான்.." - ஸ்லீவ்லெஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 19, 2021 Rating: 5
Powered by Blogger.