சீமான் கடும் எதிர்ப்பு - சமந்தாவின் அதிரடி பதிவு..!


பிரபல நடிகை சமந்தா நடித்த வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. 
 
இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இத்தொடரின் முன்னோட்டம் நேற்று முன்தினம் வெளியானது. வெளியான சில நொடிகளில் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழத்தொடங்கியது. காரணம் தமிழர்களை தீவிரவாதிகளை போல சித்தரித்துள்ளது இப்படம் எனவும் தமிழர்களுக்கு எதிரானது இப்படம் எனவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
 
 
இந்த நிலையில் அந்தத் தொடரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.


இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ என்பதையும் பதிவு செய்துள்ளார்.

சீமான் கடும் எதிர்ப்பு - சமந்தாவின் அதிரடி பதிவு..! சீமான் கடும் எதிர்ப்பு - சமந்தாவின் அதிரடி பதிவு..! Reviewed by Tamizhakam on May 21, 2021 Rating: 5
Powered by Blogger.