"அடேங்கப்பா..." - யூத், ஈரம் படங்களில் நடித்த சிந்து மேனனா இது..? - வைரல் போட்டோஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சிந்து மேனன். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகிய இவர், தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
 
நடிகை சிந்து மேனன் 1985ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள படத்தில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியும்.
 
1994ஆம் ஆண்டு ராஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாறினார். அதன்பின்னர் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை செய்தார். ‘ஈரம்‘, ‘சமுத்திரம்’, ‘கடல்பூக்கள்’ உட்பட 25க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சிந்துமேனன். 
 
 
‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் தனது சகோதரர் வாங்கிய ரூ.36 லட்சம் கடனுக்கு தன்னுடைய சொத்துக்களின் ஆவணங்களை கொடுத்திருந்தாராம். ஆனால் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தற்போது தெரிய வந்துள்ளது.
 
 
இந்த நிலையில் சிந்துமேனன் சகோதரை கைது செய்து விசாரணை செய்து வரும் போலிசார், லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்ட சிந்துமேனனையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரம் அப்படியே அமுங்கி போனது. 



இந்நிலையில், தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடியுள்ளார் அம்மணி. 
 
 
திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி கொழுக் மொழுக் என மாறிவிட்ட அவரை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.