"கொஞ்சம் திமிரான அழகி.." - "கர்ணன்" ரஜிஷா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷுற்க்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். 
 
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஏராளமான கதாநாயகிகள் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்துள்ளனர். அவர்களில் ராகினி, கே.ஆர்.விஜயா, ராதா, அம்பிகா,லலிதா,பத்மினி நயன்தாரா ஆகியோர் முக்கியமானவர்கள்.
 
அந்த வரிசையில் தற்பொழுது கர்ணன் பட கதாநாயகி ரஜிஷா விஜயனும் இணைந்துள்ளார். எம். ஏ. பட்டதாரியான இவர் கேரளா மாநிலம் கொச்சியை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். 
 
 
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போனேன். 
 
 
அவருக்கு ஜோடியாக இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

 
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் திமிரான அழகி.. பனிமலையில் ஓடும் கருப்பு அருவி போல கூந்தல் என்று சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

"கொஞ்சம் திமிரான அழகி.." - "கர்ணன்" ரஜிஷா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "கொஞ்சம் திமிரான அழகி.." - "கர்ணன்" ரஜிஷா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 27, 2021 Rating: 5
Powered by Blogger.