"ஹச்சுனு ஒரே ஒரு தும்மல்.." - மதன் கௌரி , அர்ச்சனா இடையே வெடித்த மோதல்..! - பாத்ரூம் டூரால் கலவர காடான யூ-ட்யூப்..!


இன்றைய இணைய உலகத்தில் இளைஞர்களில் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ-ட்யூப் என பொழுதை போக்குவது மட்டும் அல்லாமல் அதன் மூலம் கணிசமான பணத்தையும் சம்பாதித்து வருகிறார்கள். ஊர், பேர் தெரியாத இளைஞர்கள் மட்டுமே கடினமாக உழைத்து பொது கருதுக்கள், நாடகங்கள், கலாய் வீடியோக்கள், வரலாற்று தகவல்கள் என பல பல விஷயங்களை செய்து யூ-ட்யூபில் பிரபலமாகி வந்தனர். 
 
ஆனால், கொரோனா லாக்டவுனால் வீட்டில் சும்மா இருந்த தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்களும் யூட்யூபில் நுழைந்து தங்களது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 
 
இந்நிலையில், நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனாவும் ஒரு யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். இந்நிலையில், முதன் முறையாக எந்த யூ-ட்யூப் சேனலும் செய்யாத ஒரு விஷயத்தை செய்தார் அர்ச்சனா. 
 
அது தான் பாத்ரூம் டூர். தன்னுடைய பாத்ரூம் இப்படித்தான் இருக்கும் என "எங்க வீட்டு பாத்ரூம்" என்ற தலைப்பில் A-Z என எல்லாவற்றையும் காட்டி வீடியோவை அப்லோட் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்தும், ட்ரோல் செய்தும் பல பல வீடியோக்களை வெளியிட்டனர். 
 

 
இதனை பார்த்து கடுப்பான அர்ச்சனா அப்படி வீடியோக்களை வெளியிட்ட அனைத்து யூ-ட்யூப் சேனலுக்கு காப்பி ரைட் ஸ்ட்ரைக் கொடுத்து அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே பிரபல யூ-ட்யூபர் மதன் கௌரி பஞ்சாயத்து செய்வதாக நினைத்துக்கொண்டு யூ-ட்யூபை நம்பி பிழைப்பு நடத்தும் இளைஞர்களுக்கு இப்படி காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் பேசி சுமூகமாக இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். 
 
இப்போது வளர்ந்து வரும் யூ-ட்யூபர்களுக்கு காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். நம்பிக்கை இழுந்து விடுவார்கள் என்று கூறி ஒரு வீடியோ வை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அந்த வீடியோவில் அர்ச்சனா-வின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் படியாக தும்முவது போல "ஹச்சுமா.." என்று கூறினார். 
 
இந்நிலையில், தன்னுடைய பெயரை பயன்படுத்தி விட்டார் என கடைசியாக மதன் கௌரிக்கே காப்பி ரைட் ஸ்ட்ரைக் கொடுத்து கலவரத்தை கிளப்பியுள்ளார் அர்ச்சனா. இந்த விவகாரம் யூ-ட்யூபை கலவர காடாக்கியுள்ளது.

"ஹச்சுனு ஒரே ஒரு தும்மல்.." - மதன் கௌரி , அர்ச்சனா இடையே வெடித்த மோதல்..! - பாத்ரூம் டூரால் கலவர காடான யூ-ட்யூப்..! "ஹச்சுனு ஒரே ஒரு தும்மல்.." - மதன் கௌரி , அர்ச்சனா இடையே வெடித்த மோதல்..! - பாத்ரூம் டூரால் கலவர காடான யூ-ட்யூப்..! Reviewed by Tamizhakam on May 10, 2021 Rating: 5
Powered by Blogger.