"போட்றா வெடிய...." - இணையத்தில் கசிந்த Suriya39 படத்தின் கெட்டப் - மீம்களை பறக்கவிடும் ரசிகர்கள்..!


இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணி மீண்டும் ஆறாவது முறையாக இணையும், சூர்யாவின் 39வது படம் 'அருவா' என கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், அதன்பின் அந்தப் படத்தைப் பற்றிய அப்டேட் எதுவுமே வரவில்லை. 
 
இப்படம் மேற்கொண்டு நடக்க வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுத்தார்கள். சூர்யாவிற்கு 'சிங்கம்' படம் மூலம் பெரும் ஆக்ஷன் ஹீரோ இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஹரி. 
 
அதன் பின் 'சிங்கம் 2, சி 3' ஆகிய படங்களில் இணைந்தார்கள். சூர்யாவின் 40வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்தப் படம் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். 
 
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சூர்யாவின் படங்களில் உள்ள குழப்பம் இன்னமும் நீடிக்கிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க 39வது படம் என்று அறிவித்தார்கள். இந்த படத்தில், சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். 
 
 
இதில் ப்ரியங்கா மோகன், பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், உள்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு முன் சூர்யா வழக்கறிஞராக ஒரு படத்தில் நடிக்கிறார். 
 
 
படப்பிடிப்புதளத்தில் சூர்யா இருக்கும் புகைப்படமும் வெளியானது. சூர்யா 39 என குறிப்பிடப்படும் இந்தப் படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் சில தகவல்கள் கசிந்துள்ளன. 2017-இல் கூட்டத்தில் ஒருத்தன் என்ற படம் வெளியானது. 
 
அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடித்த இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்திருந்தது. இவர் சூர்யாவின் நெருங்கிய உறவினர். இந்தப் படத்தை இயக்கியவர் டி.ஜே.ஞானவேல். 
 
 
இவர்தான் சூர்யா 39 படத்தை இயக்குவதாகவும், இதில் சூர்யா வழக்கறிஞராக கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பதாகவும் தகவல் உள்ளது.இந்நிலையில், அந்த தகவலை உறுதிபடுத்தும் விதமான நடிகர் சூர்யா வழக்கறிஞர் வடத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
 

இதனை பார்த்த ரசிகர்கள், மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"போட்றா வெடிய...." - இணையத்தில் கசிந்த Suriya39 படத்தின் கெட்டப் - மீம்களை பறக்கவிடும் ரசிகர்கள்..! "போட்றா வெடிய...." - இணையத்தில் கசிந்த Suriya39 படத்தின் கெட்டப் - மீம்களை பறக்கவிடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 05, 2021 Rating: 5
Powered by Blogger.