25 ஆண்டுகளுக்கு பிறகு 22 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் மீனா..!


மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது. அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது. 
 
தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை விஷயம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார். 
 
சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் எடுத்தனர். இந்த படமும் ஹிட் ஆனதால் தமிழில் எப்போது இதை ரீமேக் செய்வீர்கள் என இயக்குனரிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். 
 
தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடிக்க மாட்டார் என தெரிகிறது பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த கௌதமி கமல் சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர். 
 
இருவரும் பேசிக் கொள்ளாத நிலையில் கௌதமி மறுபடியும் கமலுடன் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது அதனால் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மீனாவே கமலுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இருவரும் அவ்வை சண்முகி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளுக்கு பிறகு 22 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் மீனா..! 25 ஆண்டுகளுக்கு பிறகு 22 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் மீனா..! Reviewed by Tamizhakam on June 22, 2021 Rating: 5
Powered by Blogger.