தமன்னாவா இது..? - நம்பவே முடியலையே..! - உடல் எடை கூடி பொசு பொசுன்னு இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..!

 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தமன்னா. சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதே உண்மை. 
 
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் மேலும் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டு வருகிறார் தமன்னா. 
 
தற்போது நவம்பர் ஸ்டோரி என்ற தமிழ் வெப்சீரிஸில் நடித்துள்ள தமன்னாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.. அதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். 
 
அதேசமயம் இதற்கு முன்பு தெலுங்கில் அவர் நடித்திருந்த 11 ஹவர்ஸ் என்ற வெப்சீரிஸிற்கு வரவேற்பு இல்லை. இதுகுறித்து தமன்னா அளித்துள்ள ஒரு பதிலில், ‛‛சினிமாவில் கவர்ச்சி நாயகி என்று மட்டுமே அறியப்பட்ட நான் இப்போது வெப்சீரிஸில் பர்பாமென்ஸ் நடிகையாக என்னை நிரூபித்து வருகிறேன். 
 
தற்போது வெளியாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. ஆனால் 11 ஹவர்ஸ் தொடர் வெற்றி பெறவில்லை. அதற்காக எனது நடிப்பை குறை சொல்ல முடியாது. வெற்றி தோல்விகளை ஒப்பிடுவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எனது பணி மட்டுமே அனைத்துக்கும் பதிலளிக்கும். 
 
அடுத்தடுத்து நடிக்கும் தொடர்களில் இன்னும் வலுவான வேடங்களில் தைரியமாக நடித்து என்னை நிரூபிப்பேன்'' என்கிறார். அதே சமயம் ஒல்லி பெல்லியாக இருந்த தமன்னா தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ளார். 


 
அவ்வப்போது பொதுவெளியில் தோன்றும் அம்மணி தற்போது மிகவும் கவர்ச்சியான உடலோடு ஒட்டிய உடையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தமன்னாவா இது..? நம்பவே முடியலையே..  உடல் எடை கூடி பொசு பொசுன்னு இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..! என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தமன்னாவா இது..? - நம்பவே முடியலையே..! - உடல் எடை கூடி பொசு பொசுன்னு இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..! தமன்னாவா இது..? - நம்பவே முடியலையே..! -  உடல் எடை கூடி பொசு பொசுன்னு இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..! Reviewed by Tamizhakam on June 01, 2021 Rating: 5
Powered by Blogger.