"காந்த கண்ணழகி.. செக்ஸி லேடி.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ - வச்ச கண்ணு வாங்காமல் பாக்கும் ரசிகர்கள்..!


இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் தயாரிப்பில், மணிகண்டன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் மற்றும் பலர் நடித்த படமான 'காக்கா முட்டை' படம் வெளிவந்து இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. 
 
2015ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் திரைப்படமாகத் தேர்வு, படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகத் தேர்வு என இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற படம். 
 
தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட படம். இப்படத்தைப் பற்றி நினைவு கூர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், “நாட்கள் எப்படி நகர்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய தினத்தில் வெளிவந்த படம் 'காக்கா முட்டை'. 
 
எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமான முக்கியமான படம். பல தடைகளை உடைத்து, எனது வாழ்க்கையில் என்னை உயர்த்திய படம். இயக்குனர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் சார் ஆகியோருக்கு மகத்தான நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் மகளிர் எத்திராஜ் காலேஜில் படித்தவர், படித்துக்கொண்டு இருக்கும் பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெற்றியாளராக வந்தவர்.


அதன்பிறகு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார், பின்பு விஜய்சேதுபதியுடன் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்திற்கு பின்பு இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
 
பொதுவாக தான் நடித்து வரும் திரைப்படங்களில் கவர்ச்சி எதுவும் இல்லாமல் நடித்து வந்தார் ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் திடீரென கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசிய வருகிறார். 
 

அந்த வகையில், தற்போது, துளி மேக்கப் இல்லாமல் ராஜ ராஜ சோழன் நான் பாடலுக்கு முக பாவனைகளை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார்.

"காந்த கண்ணழகி.. செக்ஸி லேடி.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ - வச்ச கண்ணு வாங்காமல் பாக்கும் ரசிகர்கள்..! "காந்த கண்ணழகி.. செக்ஸி லேடி.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ - வச்ச கண்ணு வாங்காமல் பாக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 07, 2021 Rating: 5
Powered by Blogger.