அடேங்கப்பா..! - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை..! - வாயை பிளக்கும் கோலிவுட்..!


தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை நயன்தாரா தான் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அசால்டாக அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு நாளுக்கு நாள் தன்னுடைய மார்க்கெட்டை சத்தமில்லாமல் உயர்த்தி வருகிறார் அந்த டிவி நடிகை. 
 
முன்னரெல்லாம் சினிமாவில் மார்க்கெட் குறைந்த ஆண்ட்டி நடிகைகள் பெரும்பாலும் சீரியலில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது கதையே வேறு. சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. 
 
இவ்வளவு ஏன், சினிமா நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நெளிய வைக்கின்றனர். 
 
ஆனால் தற்போது வரை கிளாமர் காட்டாமல் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து கைவசம் 9 படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைதான் பிரியா பவானி சங்கர். இவருக்கு சீரியலில் நடிக்கும் போதே ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. 
 
அதனை பயன்படுத்தி மேயாத மான் என்னும் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அன்றிலிருந்து அம்மணிக்கு ஏறுமுகம்தான். தற்போது தமிழ் சினிமாவில் கைவசம் அதிகம் படங்கள் வைத்திருக்கும் நடிகைகளில் இவர்தான் நம்பர் ஒன். 
 

இன்றைய தேதிக்கு இளம் நடிகர்களின் பார்வை பிரியா பவானி சங்கர் மீது தான். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவே காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்கள்தான் கைவசம் வைத்துள்ளனர். 
 
அப்பேர்ப்பட்ட நடிகையை அசால்டாக தூக்கி சாப்பிட்டு விட்டதாக பிரியா பவானி சங்கரை கோலிவுட்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் நயன்தாரா ரசிகர்களோ, எல்லாருமே சூனாபானா ஆகிவிட முடியுமா என எதிர்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அடேங்கப்பா..! - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை..! - வாயை பிளக்கும் கோலிவுட்..! அடேங்கப்பா..! - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை..! - வாயை பிளக்கும் கோலிவுட்..! Reviewed by Tamizhakam on June 11, 2021 Rating: 5
Powered by Blogger.