அந்த இரவு நடந்த நிகழ்ச்சி தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது - கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக கூறிய சினேகா..!

 
பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் ஹீரோயினாக நடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டுவதில்லை. 
 
அந்த வகையில் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் துணை நடிகை அல்லது குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சினேகா. 
 
இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
 
இவ்வாறு சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார் பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
இதனைத் தொடர்ந்து தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் தற்போது உள்ள இளைஞர்கள் கூட உங்கள் இளமை இன்னும் குறையவில்லை என்று கூறிவருகிறார்கள். 
 
பொதுவாக நடிகைகள் என்றாலே முதல் பட வாய்ப்பு பற்றி பேசும் போது ஆஹா.. ஓஹோ... என்று கதைகள் அவிழ்த்து விடுவார்கள். ஆனால், சினேகா. கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக தன்னுடைய சினிமா என்ட்ரி பற்றி கூறியுள்ளார்.
 
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது, நான் சினிமாவில் நடிக்க வந்தது ஒரு கனவு மாதிரி நிகழ்ந்துவிட்டது. மலையாள ஸ்டார் நைட் நிகழ்ச்சியைப் பார்க்கப் போனேன். என்னைப் புடிச்சு நடிகையாப் போட்டுட்டாங்க. 1999-ம் ஆண்டு இரவு நடந்த அந்த நிகழ்ச்சி தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது.
 
 
நான் நடிச்ச முதல் மலையாளப் படம் நல்லா போகவில்லை. ஆனால் அந்தப் படத்தில் நடித்ததால் எனக்குள் இருந்த கேமிரா பயம் போயே போயிடுச்சு. மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் சுசிகணேசன் இயக்கத்தில் "விரும்புகிறேன்' படத்தில் நடிக்கும்போதுதான் நான் சிரிக்கவும் அழவும் கத்துக்கிட்டேன். அந்தப் படம் எனக்கு ஒரு நடிப்பு பள்ளிக்கூடமாக அமைந்தது. 
 
அந்தப் படத்தின் நடனக்காட்சியில் சுழன்று சுழன்று ஆடும்போது டமால் என்று கால் வழுக்கி விழுந்துவிட்டேன். பக்கத்தில் இருக்கிறவர்களை இடிக்காம ஆடுங்க என்று நடிகர் பிரசாந்த் என்னிடம் சொன்னார். இப்படிக்கூட நடித்த எல்லோரும் எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க. அதனாலே எல்லோருக்கும் என் மீது ஒரு ஈரமான பார்வை படர்ந்தது. எனக்குள் சொல்லிக் கிட்டேன். 

 
இன்னும் முயற்சி செய்யணும். ஏதாவது ஒரு வழியில் சாதிக்கணும், சினேகான்னு யார்னு ஒரு பத்து பேருக்குத் தெரியணும்னு ஆசை இருந்தது. இப்போது அந்த ஆசை நிறைவேறிவிட்டது என சிலிர்க்கிறார் அம்மணி.

அந்த இரவு நடந்த நிகழ்ச்சி தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது - கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக கூறிய சினேகா..! அந்த இரவு நடந்த நிகழ்ச்சி தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது - கூச்சம் இல்லாமல் வெளிப்படையாக கூறிய சினேகா..! Reviewed by Tamizhakam on June 04, 2021 Rating: 5
Powered by Blogger.