"பாத்து போங்க சார்.. குழியில விழுந்துட போறீங்க.." - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 
'காதலாகி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. தனது தனித்துவமான சிரிப்பழகால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த, இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. 
 
இதனால் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சிலே இருந்தார். இதுவரை குடும்ப குத்து விளக்காக ஜொலித்த சிருஷ்டி டாங்கே, தற்போது கிளாமர் குயினாக மாறி இன்ஸ்டாவை அதிர வைத்துள்ளார்.
 
இதுவரையில் ஹிட் படங்கள் எதுவும் கொடுத்ததில்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் சிருஷ்டி டாங்கே. தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் ஒருசில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
 
இவரின் முதல் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் மேகா, டார்லிங் திரைப்படங்களின் மூலம் தனது கன்னக்குழி சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் சிருஷ்டி டாங்கே. 
 
 
எனக்குள் ஒருவன், வில் அம்பு, கத்துக்குட்டி, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், சத்ரு போன்ற திரைப்படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டிக்கு, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையிலும் இருந்தும் வாய்ப்புகள் வருகின்றன. 
 
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'சக்ரா' திரைப்படத்திலும் ஒருசின்ன காட்சியில் தோன்றியிருந்தார் சிருஷ்டி டாங்கே. சினிமாவில் சரியாக வாய்ப்புகள் அமையாததால் அவ்வப்போது போட்டோ சூட்கள் நடத்தி, அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களிடம் லைக் வாங்கி வந்தார் சிருஷ்டி. 
 
சமீபத்தில் பாவடை தாவணியுடன் இவர் வெளியிட்ட புகைப்படம் டிரெண்ட் ஆனது. ஹோம்லி லுக்கில் ஜொலிக்கிறீங்க! என ரசிகர்கள் சிருஷ்டியின் புகைப்படத்திற்கு ஜொள்ளு விட்டனர். 


இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கன்னக்குழி அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள், பாத்து போங்க சார்.. குழியில விழுந்துட போறீங்க.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"பாத்து போங்க சார்.. குழியில விழுந்துட போறீங்க.." - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "பாத்து போங்க சார்.. குழியில விழுந்துட போறீங்க.." - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.