"பாவம்மா இந்த சிங்கிள் பசங்க.." - சாய் பல்லவி வெளியிட்ட புகைப்படங்கள் - புலம்பும் ரசிகர்கள்..!

 
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. முதல் படமே அதிரி புதிரி வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 
 
ஆனால் தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் எதுவுமே சரியாக மக்களிடம் சென்றடையவில்லை. இருந்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொழி புரியவில்லை என்றாலும் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை தேடித் தேடிப் பார்த்து வருகின்றனர். 
 
தற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பலருக்கும் சினிமா இனி சோறு போடுமா என கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
ஆனால் சாய்பல்லவி பக்கத்திலிருந்து எந்த ஊரு சத்தமும் இல்லை. இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய சென்றுள்ளார். அதில் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார். 
 
சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம். 
 
இதனால் திரிஷா இல்லனா திவ்யா என்பதைப்போல சாய்பல்லவி இல்லேன்னா வேற ஒரு நடிகை என வேறு பக்கம் வண்டியை திருப்பி விட்டாராம் அந்த தயாரிப்பாளர். 
 
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக வலம் வரும் சாய்பல்லவி தற்போது தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவதில் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் நடிகை சாய்பல்லவி ஆனால் முதன்முதலில் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது. 
 
ஆனால் அது நிறைவேறாத காரணத்தினால் நடனத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அது போக போக பின்னாட்களில் சினிமாவுக்கு இழுத்துச் செல்ல தற்போது ஹீரோயினாக பல மொழிகளில் நடித்து வருகிறார் தமிழில் இவர் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்ததால் தற்போது தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் எகிறி உள்ளது.இந்நிலையில், கை கால்களில் மருதாணி வைத்துக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், "பாவம்மா இந்த சிங்கிள் பசங்க.."  என்று புலம்பி வருகிறார்கள்.

"பாவம்மா இந்த சிங்கிள் பசங்க.." - சாய் பல்லவி வெளியிட்ட புகைப்படங்கள் - புலம்பும் ரசிகர்கள்..! "பாவம்மா இந்த சிங்கிள் பசங்க.." - சாய் பல்லவி வெளியிட்ட புகைப்படங்கள் - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 20, 2021 Rating: 5
Powered by Blogger.