என்ன கொடுமை இது..? - அனுப்பமா பரமேஸ்வரன் புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை..!


தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார். 
 
இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமடைந்தார். அதோடு இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். 
 
அந்த வகையில் இவர் முதலில் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து விட்டு அதன் பிறகுதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இந்நிலையில், மாணவர் ஒருவரின் மார்க் லிஸ்ட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் அப்போது வெளியிடப்படவில்லை, வெளியிடப்படாத ரிசல்ட்டுகள் இப்போது பீகார் அரசு இணையதளத்தில் வெளியிட்டது. 
 
இதில் மாணவர் ஒருவரின் மார்க் லிஸ்ட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சையடைந்த அவர் இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். 
 

 
இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியல் வெளியானது. அதில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

என்ன கொடுமை இது..? - அனுப்பமா பரமேஸ்வரன் புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை..! என்ன கொடுமை இது..? - அனுப்பமா பரமேஸ்வரன் புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை..! Reviewed by Tamizhakam on June 25, 2021 Rating: 5
Powered by Blogger.