"கிளாமர் குயின்... டஸ்க்கி ப்யூட்டி..." - ஸ்லீவ்லெஸ் உடையில் சீரியல் லைட் வெளிச்சத்தில் கிறங்கடிக்கும் நீலிமா ராணி..!

 
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக நடித்திருந்தார். 
 
அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். 
 
மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம். 
 
 
அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம். 
 
வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். 
 
 
அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். 
 
இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 
இவருக்கு தற்போது 37 வயது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூட இவரது அழகில் கிறங்கி போய் கிடக்கிறார்கள்.
"கிளாமர் குயின்... டஸ்க்கி ப்யூட்டி..." - ஸ்லீவ்லெஸ் உடையில் சீரியல் லைட் வெளிச்சத்தில் கிறங்கடிக்கும் நீலிமா ராணி..! "கிளாமர் குயின்... டஸ்க்கி ப்யூட்டி..." - ஸ்லீவ்லெஸ் உடையில் சீரியல் லைட் வெளிச்சத்தில் கிறங்கடிக்கும் நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on July 29, 2021 Rating: 5
Powered by Blogger.