18 வயசு கூட ஆகல.. அதுக்குள்ள இம்புட்டு கிளாமரான ட்ரெஸ் தேவையா..? - ரவீனா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 
மௌனராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை ரவீனா தாஹா. முதல் சீசனில் குழந்தையாக இருந்த சக்தி இரண்டாம் சீசனில் வளர்ந்துவிட்டது போல காட்டப்படுகிறது. வளர்ந்த சக்தியாக தான் ரவீனா நடித்து வருகிறார். 
 
சீரியலில் அம்மாவின் உயிரை காப்பாற்ற பணத்திற்காக திருமணம் செய்துகொள்ளும் சக்தி அதற்கு பிறகு படும் கஷ்டங்கள் தான் தற்போது சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. 
 
ரவீனா சீரியலில் திருமணமான பெண்ணாக நடித்தாலும் அவருக்கு உண்மையில் இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா தொடர்ந்து ரசிகர்களுக்காக பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வரிசையில் அவர் மிகவும் குட்டையான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதற்காக அவரை விமர்சித்து வருகின்றனர்.
 
இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். 
 
 
விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். இதில் அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரவீனா தாஹா.
 
 
அதன் பின்னர் நடனம், காமெடி ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான ரவீனா தாஹா, முன்னணி நடிகைகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். 


அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 18 வயசு கூட ஆகல.. அதுக்குள்ள இம்புட்டு கிளாமரான ட்ரெஸ் தேவையா..? என்று விளாசி வருகிறார்கள்.