பிரபல நடிகர் மயில்சாமி தனது 19 வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. 1985 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில் சாமி.இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். 
 
தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் மயில்சாமி. 
 
தற்போது முறுங்கைக்காய் சிப்ஸ் மற்றும் இடியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக உள்ளார் நடிகர் மயில்சாமி. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.
 
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மயில்சாமி, தோல்வியை சந்தித்தார். இடையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகை அர்ச்சனாவுடன் சேர்ந்து "காமெடி டைம்" என்ற ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். 
 
 
இவர் கன்னி ராசி படத்தில் நடித்திருந்தாலும், அதற்கு முன்பே நடிகர் பாக்யராஜ் இயக்கி நடித்த "தாவணி கனவுகள்" படத்தில் ஒரு சில வினாடிகள் திரையில் தோன்றியுள்ளார். 


கன்னிராசி படத்தில் கவுண்டமணி வீட்டிற்கு மளிகை சாமான் கொண்டு வந்து கொடுக்கும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார். இளம் வயதில் இருக்கும் அவருடைய புகைப்படங்களை பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள். இதோ உங்களுக்காக அந்த புகைப்படங்கள்.

பிரபல நடிகர் மயில்சாமி தனது 19 வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! பிரபல நடிகர் மயில்சாமி தனது 19 வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.