"வெந்து தணிந்தது காடு" - வெளியானது 2nd லுக் போஸ்டர் - இதை கவனித்தீர்களா..?


நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் சிம்பு 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கெளதம் மேனன் இயக்கத்தில் இணைந்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. 
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் பரபரப்பாக நடந்து முடித்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. 
 
அந்த வகையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்பாத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நாயகி காயடுலோஹர் இணைய உள்ளாராம். 
 
எனவே சிம்புவின் காதல் காட்சிகள், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் எடுக்க படலாம் என கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் திருச்சந்தூரிலேயே படப்பிடிப்பு நடைபெற உள்ளதா? அல்லது வேறு இடத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
 

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை கவனிக்கும் போது, ஒன்று அகதிகள் சம்பந்தமான படமாகவோ அல்லது கே.ஜி.எஃப் போல கொத்தடிமைகள் சம்பந்தமான கதைக்காலமாக இருக்கலாம் என ரசிகர்களை கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

"வெந்து தணிந்தது காடு" - வெளியானது 2nd லுக் போஸ்டர் - இதை கவனித்தீர்களா..? "வெந்து தணிந்தது காடு" - வெளியானது 2nd லுக் போஸ்டர் - இதை கவனித்தீர்களா..? Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.