பிக்பாஸ் சீசன் 5-ன் ப்ரோமோ - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!


விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். 4 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் 5வது சீசன் தமிழில் துவங்க உள்ளது. தற்போது இதற்கான பணிகள் துவங்கி விட்டன. போட்டியில் பங்கேற்பவர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் உலாவ தொடங்கிவிட்டன. 
 
கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு போலவே இந்தாண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சில மாதங்கள் தள்ளியே துவங்குகிறது. அனேகமாக அடுத்தமாதம் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பிக்பாஸ் சீசன் 5க்கான புரொமோஷன் போட்டோ ஷூட் நிகழ்வு நேற்று துவங்கியது. 
 
இதில் கமல்ஹாசன் பங்கேற்றார். அதோடு இந்த வார இறுதியில் பிக்பாஸ் சீசன் 5க்கான முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாக உள்ளது. அநேகமாக இது நிகழ்ச்சிக்கான டீசராக இருக்கலாம் என தெரிகிறது. இந்த முறை பிக்பாஸ் 5 லோகோவும் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. 
 

மேலும் கடந்த காலங்களில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த சீசனை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல பல புதிய மாற்றங்களையும் செய்ய உள்ளனர். 
 
இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் இன்றும் தொடர்ந்து நடைபெறவுள்ளதாம். அதேபோல் இதில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் தேர்வு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த சீசனில் சினிமா பிரபலங்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் சீசன் 5-ன் ப்ரோமோ - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..! பிக்பாஸ் சீசன் 5-ன் ப்ரோமோ - இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.