ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம்..! - த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..!

 
கோலிவுட்டில் ஒரு தமிழ்ப் பெண் முன்னணி நடிகையாக இருப்பது உண்மையிலேயே அரிதான விஷயம். மும்பை, ஆந்திரம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். 
 
தமிழ் இயக்குநர்களும் தமிழ்ப் பெண்களை விடவும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அது என்னவோ அப்படியொரு விநோத நடைமுறை தமிழ்த் திரையுலகில் பல ஆண்டு காலமாக நிலவி வருகிறது. 
 
தமிழ் ரசிகர்களும் எந்தப் பேதமும் பார்க்கமால் இதர மொழிக் கதாநாயகிகளைக் கொண்டாடி வருகிறார்கள்.1999-ல் முதலில் மிஸ் சேலம் பட்டத்தை வென்ற த்ரிஷா, அதே வருடத்தில் மிஸ் சென்னை பட்டத்தையும் வென்று கவனம் ஈர்த்தார். 
 
உடனே, ஊடகங்களில் த்ரிஷாவின் புகைப்படங்களும் பேட்டிகளும் வெளியாகின. அட்டைப் படங்களிலும் த்ரிஷாவின் புகைப்படம் மின்னியது. விளம்பரப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன.1999-ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்தார் த்ரிஷா. 
 
கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியவர் ப்ரியதர்ஷன். லேசா லேசா படத்துக்காக. இந்தப் படம் வெளிவரும் முன்பு த்ரிஷா நடிப்பில் மெளனம் பேசியதே, மனசெல்லாம் ஆகிய படங்கள் வெளிவந்தன. 
 
முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே (2002) தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம்.த்ரிஷாவால் எப்படி சாமி, கில்லி படங்களை மறக்க முடியாதோ அதற்கு நிகராக அவரை மிகவும் பிரபலப்படுத்திய படம் 96. 
 
 
ஜானுவாக அசத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். த்ரிஷாவால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என வியக்க வைத்தார். இந்தப் படம் வெளியான 33 நாள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பானபோது அதை எதிர்த்து ட்வீட் செய்து ஆச்சர்யப்படுத்தினார் த்ரிஷா. 
 
இந்தப் படம் எனக்கு ஏராளமான விருதுகளையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கூறினார் த்ரிஷா. இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் மியா கலிஃபான்னு நெனசிட்டோம்.. என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்