ஒரு நிமிசம் ஜோதிகா-ன்னு நெனசிட்டோம்.. - சீரியல் தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம்..!

 
அட்டகாசமான குரல்.. தேனிலும் இனிய குரல்.. கூடவே கம்பீரமும் அப்பிக் கொள்ளும்.. அசரடிக்கும் அழகு.. சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி.. நடிப்பின் நவரசத்தையும் மொத்தமாக பிழிந்து கொடுக்கும் அசாத்தியம்.. அதுதான் தேவிப்பிரியா. 
 
இவர் நாயகியாக நடித்தாலும் சரி, கேரக்டரில் வந்தாலும் சரி, வில்லியாக வெளுத்து வாங்கினாலும் சரி.. லயித்துப் போய் ரசிக்க வைப்பார்.. அதுதான் தேவிப்பிரியா. 
 
இவர் நடித்த சீரியல் எதுவும் சோடை போனதில்லை. சோர்ந்து போனதில்லை. காரணம் தேவிப்பிரியா. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நச்சென்று ஒரு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் சந்திரகுமாரி சீரியல் மூலமாக. 
 
கொஞ்சம் உப்பினாற் போல காட்சி தந்தாலும் கன்னமெல்லாம் பன் போல உப்பிக் கிடந்தாலும்.. அதே தேவிப்பிரியாதான்.. அதே கம்பீரம்தான்.. அதே அழகும்தான்.வில்லி கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தவர். 
 
இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் நடிகை வரிசையில் இருக்கிறேன் என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தார்.
 
அந்த வகையில் தற்போது ஃபுல் மேக்கப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நீங்க மட்டும் எவ்வளவு வயசானாலும் அப்படியே இருக்கீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
 
இன்னும் சிலர் ஒரு நிமிஷம் ஜோதிகான்னு நெனச்சிட்டேன் எனவும் குட்டி ஜோதிகா எனவும் கமெண்டி வருகிறார்கள்.

ஒரு நிமிசம் ஜோதிகா-ன்னு நெனசிட்டோம்.. - சீரியல் தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம்..! ஒரு நிமிசம் ஜோதிகா-ன்னு நெனசிட்டோம்.. - சீரியல் தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 27, 2021 Rating: 5
Powered by Blogger.