"அம்மாடியோவ்... எத்தா தண்டி..." - ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன "ஈரம்" பட நடிகை..!

 
விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சிந்து மேனன். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகிய இவர், தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். 
 
நடிகை சிந்து மேனன் 1985ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள படத்தில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியும்.
 
1994ஆம் ஆண்டு ராஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாறினார். அதன்பின்னர் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை செய்தார். 2009ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான வீரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சிந்து மேனன். 
 
 
ஆனால் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
 
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தமிழ் சினிமாவுக்கு வராமல் தொடர்ந்து கன்னடா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தியிருந்தார். 
 
 
தற்போது 34 வயதாகும் சிந்து மேனன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஏற்கனவே உடல் எடை கூடி இருந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதால் மேலும் உடல் எடை கூடியது போல் தெரிகிறார். 


சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு தற்போது இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் சிந்து மேனன்.