மீண்டும் சினிமாவில் நுழைய முயற்சிக்கும் மீரா வாசுதேவன்..!



தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை மீரா வாசுதேவன். மேலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் ஜோடியாக இவர் நடித்த அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. 
 
ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அ டைந்தன, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், “கோல்மால்” என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழில் நடித்த “உன்னை சரணடைந்தேன்” திரைப்படம் வெற்றி பெற்றது. .
 
அதன் பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்ட மீரா, அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார். 
 
அதன் பிறகு, சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த அனிஷ் ஜான் கோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில மாதங்களில் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். 
 
தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அடங்கமறு” படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார்.தற்போது, பட வாய்ப்புக்காக பல வகைகளில் முயற்சித்து வருகிறார் அம்மணி.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்