"ஓஹோ.. - திரிஷாவுடன் விஜய் நடிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா..?..." - வெளியான தகவல்..!

 
திரையுலகைப் பொறுத்தவரை படங்களில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து கிசுகிசுக்கள் வெளி வருவது ஒன்றும் புதிதல்ல. அதுவும் நம் தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம். 
 
2 படத்திற்கு மேல் தொடர்ந்து நடித்தாலே அந்த நடிகர் – நடிகைகள் பற்றி கிசுகிசு செய்திகள் வெளிவர தொடங்கிவிடும். ஆனால் இவ்வாறு வெளி வரும் கிசுகிசுக்களை முற்றிலுமாக பொய்யான தகவல் என கூறி ஒதுக்கி விட முடியாது. 
 
அவற்றில் சிறிதளவேனும் உண்மை இருக்கும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் முதல் தற்போது உள்ள நடிகர்கள் வரை அனைவருமே இதுபோன்ற கிசுகிசுக்களில் சிக்கி உள்ளனர். 
 
 
அப்படி ஒரு கிசுகிசுவில் சிக்கியவர் தான் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என செல்லமாக அழைக்கப்படும் விஜயும் ஒரு சமயத்தில் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல. தற்போது முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷாதான். 
 
விஜய் – த்ரிஷா இருவரும் ஜோடி சேர்ந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தனர். அதில் குருவி படத்தின் போது விஜய் மற்றும் த்ரிஷா இடையே நெருக்கம் ஏற்பட்டதாக அந்த சமயத்தில் கூறப்பட்டது. 
 
மேலும் இருவரும் ஒரே கேராவனை பயன்படுத்திக் கொள்வது, படப்பிடிப்பில் கையை பிடிப்பது, கொஞ்சுவது என இருப்பதாக பத்திரிகைகளில் அடிக்கடி கிசுகிசு வெளியானது. மட்டுமில்லாமல், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இது பற்றிய டாக்குகள் பரவ ஆரம்பித்தது. இதை கேள்விப்பட்ட விஜய்யின் மனைவி சங்கீதா செம டென்ஷன் ஆகிவிட்டாராம். 

 
மேலும் த்ரிஷாவுடன் சேர்ந்து இனிமேல் படம் நடிக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டாராம். அதன் பிறகு த்ரிஷாவுடன் சேர்ந்து விஜய் நடிக்கவே இல்லை. எங்கேயாவது எதேர்ச்சையாக த்ரிஷாவை பார்த்தால் கூட, கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவாராம் விஜய்.
"ஓஹோ.. - திரிஷாவுடன் விஜய் நடிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா..?..." - வெளியான தகவல்..! "ஓஹோ.. - திரிஷாவுடன் விஜய் நடிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா..?..." - வெளியான தகவல்..! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.