"அந்த கண்ண பாத்தாக்கா..." - கேரவனுக்குள் திருதிருவென முழிக்கும் ப்ரியா பவானி..! - வைரல் செல்ஃபி..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர். 
 
கேரளா மற்றும் பிற மாநில நடிகைகள் கோலோச்சும் சினிமாவில், வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் பெண்ணாக அவரது வளர்ச்சி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 
 
தற்போது பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே ஆகியப் படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. அதோடு, பெயரிடப்படாத ஹரியின் படம், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல, பெயரிடப்படாத சர்ஜூன் படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. 
 
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தான் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 

 
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய ஷாட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என தன்னுடைய கேரவேனில் திருதிருவென முழித்த படி எடுத்த செல்ஃபி போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார் அம்மணி.
"அந்த கண்ண பாத்தாக்கா..." - கேரவனுக்குள் திருதிருவென முழிக்கும் ப்ரியா பவானி..! - வைரல் செல்ஃபி..! "அந்த கண்ண பாத்தாக்கா..." - கேரவனுக்குள் திருதிருவென முழிக்கும் ப்ரியா பவானி..! - வைரல் செல்ஃபி..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.