"டே.. யார்ரா நீயி..." - "கும்பிபாகம்" போல தினமும் இளம்பெண்ணுக்கு பீட்சா டார்ச்சர்..! - இறுதியில் வந்த மெசேஜ்..!


பெங்களூர் அருகே எலகங்கா நியூ டவுன் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு வீடு, அலுவலகம் என தினமும் அவரது பெயரில் பீட்சா ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என டெலிவரி செய்துள்ளனர். 
 
நான் ஆர்டர் செய்யவில்லை என்று மறுத்தும், உங்கள் பெயரில் தான் ஆர்டர் ஆகியுள்ளது என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து முதல் முறை பணத்தை செலுத்தி பீட்சாவை பெற்றுக்கொண்டுள்ளார் அவர். 
 
ஆனால், அடுத்தடுத்து நாட்களில் தொடர்ந்து பீட்சா டெலிவரி ஆகிக்கொண்டே இருக்க பயங்கர கடுப்பாகியுள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்னிடம் "நான் உங்களை காதலிக்கிறேன்.. உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்" என இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
 
ஆனால், அந்த பெண் அவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதனையடுத்து, அந்த பெண்ணிற்கு தினமும் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் பீட்சா வந்துள்ளது. தினமும் பீட்சா வந்து கொண்டிருக்க, அந்த பெண்ணின் பேஸ்புக்கில் காதலை சொன்ன அந்த இளைஞர் நான் தான் உனது பெயரில் தினமும் பீட்சா ஆர்டர் செய்கிறேன். 
 
என் காதலை ஏற்றுக்கொள்ளும் வரை தினமும் உங்கள் பெயரி பீட்சா ஆர்டர் செய்துகொண்டே இருப்பேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார்.இளைஞர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் மர்மநபர் மீது எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். 
 
அதில், தன் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

"டே.. யார்ரா நீயி..." - "கும்பிபாகம்" போல தினமும் இளம்பெண்ணுக்கு பீட்சா டார்ச்சர்..! - இறுதியில் வந்த மெசேஜ்..! "டே.. யார்ரா நீயி..." - "கும்பிபாகம்" போல தினமும் இளம்பெண்ணுக்கு பீட்சா டார்ச்சர்..! - இறுதியில் வந்த மெசேஜ்..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.