வயதானலும் இன்றும் இளம் நடிகை போல லைம் லைட்டில் இருக்கும் நடிகையை பற்றி சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது.
ஆள் என்ன ஆனார்..? எங்கே போனார்.. என்று தெரியாமல் இருந்த நடிகையை உச்ச நடிகர் படத்தில் வில்லியாக கமிட் செய்து அவரது கேரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றார் அந்த முன்னணி இயக்குனர்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனருக்கும் இவருக்குமான நெருக்கம் அதிகமானது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தார் இயக்குனர். ஆனால், அதற்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்த விவகாரம் வெளியே வந்து இயக்குனர் குடும்பத்தில் பெரிய களேபரத்தை ஏற்படுத்தியதாம்.
ஒரு கட்டத்தில் திருமணமானவர் என்பதை மறந்து அந்த இயக்குனருடன் ஓவர் நெருக்கமாகி கர்ப்பமாகியுள்ளார் நடிகை. இதனால், இயக்குனர் வீட்டில் பூகம்பம் வெடித்துள்ளது. இயக்குனரின் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பரான உச்ச நடிகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குனரை விட்டு விடும் படி நடிகைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், 2002-ம் வருடமே 75 லட்சம் ரூபாய் பணத்தை நடிகைக்கு செட்டில் செய்து ஆந்திரா பக்கம் நடிகையை அனுப்பி வைத்துள்ளார்கள். அதன் பிறகு, நடிகையுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார் இயக்குனர்.
தான் இயக்கும் படங்களில் சக நடிகர்கள் அந்த நடிகையை இந்த ரோலுக்கு நடிக்க வைக்கலாம் என்று கோரிக்கை வைத்தால் கூட வேண்டாம் என மறுத்து விட்டு தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து வருகிறாராம். 75 லட்சம் பணத்துடன் ஆந்திரா சென்ற அம்மணி அங்கே ஏற்கனவே திருமணம் ஆன இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம்.
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்.. தடைக்கல்லும் ஒவ்வொரு படிக்கல்..!
Tags
Gossip