கயல் ஆனந்தியா இப்படி கிளாமராக நடித்துள்ளார்..? - நம்பவே முடியலையே.. - தீயாய் பரவும் வீடியோ..!

 
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். 
 
இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகை ஆனந்தி. 
 
விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு மற்றும் சமீபத்தில் வெளியான கமலி ஃப்ரம் நடுக்காவேரி என இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே பாராட்டுக்களை அள்ளி வருகின்றன.ஜாம்பி ரெட்டி எனும் தெலுங்கு படத்தில் சமீபத்தில் நடித்து முடித்த கயல் ஆனந்தி மீண்டும் தெலுங்கில் உருவாகி உள்ள ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்தில் நடித்துள்ளார். 
 
சமீபத்தில் அந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.70 எம்.எம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கருணா குமார் இயக்கியுள்ள ஸ்ரீதேவி சோடா சென்டர் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
 
இதில், நாயகனாக சுதீர் பாபு நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ஆனந்தி நடித்திருக்கிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரான காட்சிகளில் நடித்துள்ளார். 
 


இந்த காட்சிகளை வெட்டி ஒட்டி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், கயல் ஆனந்தி இப்படியெல்லாம் நடிப்பார் என இப்போது தான் தெரியும் என புலம்பி வருகிறார்கள்.

கயல் ஆனந்தியா இப்படி கிளாமராக நடித்துள்ளார்..? - நம்பவே முடியலையே.. - தீயாய் பரவும் வீடியோ..! கயல் ஆனந்தியா இப்படி கிளாமராக நடித்துள்ளார்..? - நம்பவே முடியலையே.. - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.